Kandupidi news

இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக அதிகரிக்கும்: ஐ.நா. ,

புதுடில்லி:2016-2017 மற்றும் 2017-2018 ஆகிய நிதி ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும் என ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.இந்தியாவில் அடுத்த ஆண்டு(2017) பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆய்வு மேற்கொண்டது.

பொருளாதார வளர்ச்சியில் மீட்சி:
அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,2016-2017 மற்றும் 2017-2018 ஆகிய நிதி ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும். பொருளாதார சீர்திருத்தத்தின் காரணமாக முதலீடு வேகமாக ...

சீனக் கப்பல்களின் ஊடுருவல்: தீவிர கண்காணிப்பில் இந்தியா

புதுடில்லி:சீனக் கடற்படையின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் நடமாட்டத்தை இந்தியப் பெருங்கடல் பகுதியில் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் பதற்றம்
தேசிய கடற்படை தினத்தையொட்டி, டில்லியில் நேற்று(02-12-16) நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதி சுனில் லாம்பா,
இது குறித்து பேசியதாவது:இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை சீனக் கடற்படை நிறுத்தி வைத்து, கடற்பகுதியில் ...

ரயில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர்களில் வருகிறது ஸ்வைப் மெஷின் வசதி

புதுடில்லி: நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விரைவில் ஸ்வைப் மெஷின் வர உள்ளது என ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 500,1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய 500,2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மேலும் பழைய நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் டிபாசிட் செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் டிபாசிட் செய்து ...

வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் சரியா? பொதுநல வழக்காக விசாரிக்க பரிந்துரை

சென்னை:'வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் சொத்து விபரங்களை சரிபார்க்க, மாநில தேர் தல் ஆணையத்திடம் வழிமுறைகள் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. கவுன்சிலர்களின் சொத்து விபரங்கள் குறித்த பிரச்னையை, பொதுநல வழக்காக விசாரிக்க, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உள்ளது.

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த, பொன். தங்கவேலு தாக்கல் செய்த மனு: சென்னை யில், 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளபெருக் கால் பாதிக்கப்பட்டேன்; உடைமைகளை இழந்தேன்.மாநகராட்சியிடம் இழப்பீடு கோரினேன்; பதில் இல்லை. மனுவை பரிசீ லிக்க, மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். ...

புயல் அபாயத்திலிருந்து கடலோர மாவட்டங்கள் தப்பியதால்... நிம்மதி!:வலுவிழந்த 'நடா'வால் நேற்று பல பகுதிகளில் கனமழை:அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

தமிழகத்தை மிரட்டிய, 'நடா' புயல் வலுவிழந்து, நிலப்பகுதிக்குள் நுழைந்ததால், கடலோர மாவட்டங்கள் புயல் அபாயத்தில் இருந்து தப்பின. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வலுவிழந்த புயலால், மாநிலத்தின் பல பகுதி களில், நேற்று கனமழை கொட்டியது.அணை களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.'வங்கக் கடலில் உருவான, நடா புயல், கடலுார் அருகே, பலத்த காற்றுடன் கரையை கடக்கும்' என, சென்னை வானிலை மையம் எச்சரித்து இருந்தது. ஆனால், அந்தப் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, காரைக்காலுக்கு ...

கவர்னருடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு ஏன்?

சென்னை: கவர்னர் வித்யாசாகர் ராவை, தி.மு.க., பொருளாளரும்,எதிர்க்கட்சி தலைவரு மான ஸ்டாலின், நேற்று மாலையில் சந்தித்து பேசினார். அப்போது, கோரிக்கை மனு ஒன்றையும் அவரிடம் வழங்கினார்.

அந்த மனுவில், சட்டசபை குழுக்கள் அமைக் கப்படாதது குறித்தும், அவற்றை அமைக்க, நட வடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடப்பட் டிருந்தது. மனுவில் ஸ்டாலின், சட்டசபை காங்கிரஸ் தலைவர், கே.ஆர். ராமசாமி, முஸ்லிம் லீக் முகமது அபுபக்கர் உட்பட, 10 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.
கருணாநிதி உடல் நலம்:
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, இரண்டாவது நாளாக ...

வேண்டாம் 'ரேட்டிங்' அரசியல் : மோடிக்கு ராகுல் 'அட்வைஸ்'

புதுடில்லி: ''பிரதமர் மோடி, செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக 'டிவி சேனல் ரேட்டிங்' அரசியல் செய்து வருகிறார்,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் குற்றஞ் சாட்டியுள்ளார்.

டில்லியில் நேற்று, காங்., - எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. உடல்நல குறைவால், கட்சித் தலைவர் சோனியா பங்கேற்கவில்லை; அவருக்கு பதில், துணைத் தலைவர் ராகுல், கூட்டத்தில் உரை யாற்றினார். அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, செல்வாக்கை உயர்த்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளார்; அவர் செல்வாக்கு உயர, மக்கள் கஷ்டப்படுகின்ற னர். 'ரேட்டிங்' வரிசையில் முந்துவதற்காக, பரபரப்பு ...

டிஜிட்டல் மயமாகும் மருத்துவ சேவைகள்

புதுடில்லி: அனைவருக்கும், தரமான மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் கிடைக்கும் வகையில், மருத்துவ சேவையை டிஜிட்டல் மயமாக்கும் பணி வேகமாக நடந்து வருவதாக, மத்திய சுகாதாரத் துறை இணைஅமைச்சர், பாகன் சிங் குலஸ்தே தெரிவித்தார்.

லோக்சபாவில் நேற்று, பாகன் சிங் குலஸ்தே, எழுத்து மூலம் அளித்த பதில்:மருத்துவசேவை யில்,தகவல் தொழில்நுட்பத்தை அதிகஅளவில் பயன்படுத்தும் முயற்சி ஏற்கனவே துவங்கியுள்ளது. இதனால், கிராமப் பகுதியில் உள்ளோருக்கும்
தரமான சிகிச்சை கிடைக்கும்.'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், மருத்துவத் துறையை டிஜிட்டல் மயமாக்கும் ...

ரொக்க பண புழக்கமே ஊழலுக்கு வித்து: மோடி

புதுடில்லி: ''அதிக அளவில் ரொக்க பண புழக் கம், ஊழல் மற்றும் கறுப்பு பணம் அதிகரிக்க வழிவகுக்கும்,'' என, பிரதமர் மோடி கூறி உள்ளார்.

செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னையில், எதிர்க் கட்சிகள், பிரதமர் மோடியை கடுமையாக விமர் சித்து வருகின்றன. இந்நிலையில், அதுகுறித்து, இணையதளம் ஒன்றில், பிரதமர் மோடி எழுதிய கட்டுரை விபரம்: ஊழலால் நாட்டின் வளர்ச்சி முடங்கி போகிறது. 21ம் நுாற்றாண்டில், ஊழல் இல்லாத நாடாக,
இந்தியா திகழ வேண்டும். இனிமேல், ஊழல் ஒழிந்து, வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். நடுத்தர மற்றும் உயர் நடுத்தர பிரிவு மக்களின் கனவு நனவாக வேண்டும்; இதற்கு ...

'ஜி.எஸ்.டி., அமலாகாவிட்டால் சிக்கல்'

புதுடில்லி: ''அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத் திற்குள், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புமுறை அமலாகாவிட்டால், வரி விதிப்பு முறையில் சிக்கல் ஏற்படும்,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி.,யை, அடுத்த ஆண்டு, ஏப்ரல், 1ம் தேதி முதல் அமல்படுத்துவதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது.மத்திய, மாநில நிதியமைச்சர் கள் அடங்கிய, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு அம்சங்களில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதால், முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால், இந்த வரி விதிப்பு முறை ...

பத்திரப் பதிவு கட்டணம் குறைக்க அரசுக்கு...யோசனை!:வரிவிதிப்பு முறைகளை எளிமைப்படுத்தவும் ஆய்வு

புதுடில்லி:கறுப்புப் பணத்தை ஒடுக்கும் நட வடிக்கையின் அடுத்த கட்டமாக, வரியை தள்ளுபடி செய்வதற்கு,அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரத்தை நீக்குவது குறித்து ஆராயப்படுவ தாக தெரிவித்துள்ள,'நிடி ஆயோக்' துணைத் தலைவர், அரவிந்த் பனகாரியா, 'வரிகள், பத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும்' என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையில், செல்லாத ரூபாய் நோட்டுகள் அறிவிப்பு வெளியிடப் பட்டது. இந்நிலையில், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், நிடி ஆயோக் அமைப்பு, கறுப்புப் பணத்தை ஒடுக்குவதற்கான பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.மத்திய அரசின் ...

பரிசோதனை மையங்களில் நடந்த சோதனை : அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 'தமிழகத்தில் உள்ள, மருத்துவப் பரிசோதனை மையங்களில், 10 ஆண்டுகளில், எத்தனை முறை சோதனை நடத்தப்பட்டு உள்ளது என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை தெரிவித்ததாக, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, டாக்டர் ராமச்சந்திரன் என்பவரை, மருத்துவ தொழில் புரிவதில் இருந்து, 'சஸ் பெண்ட்' செய்து, மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். இம் மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.மருத்துவக் கவுன்சில் உத்தரவுகளை மீறும் டாக்டர்கள் மீது ...

புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு

புதுடில்லி: நடா புயல் வலுவிழந்து போன நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் இரண்டு நாட்களில் தமிழகம் புதுச்சேரி, ஆந்திராவில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் மற்றும் நகரும் திசை :
இது தொடர்பான அறிக்கையில் வரும் டிச.4 ல் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பலம் மற்றும் நகரும் திசை ஆகியன பொருத்து மழை மற்றும் காற்று அளவு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. நேற்றைய நடா புயல் எவ்வித ...

இறந்த யாழ் பல்கலை மாணவர்களின் பெற்றோரை போலிசார் விசாரணை செய்தது ஏன்? நீதிமன்றம் கேள்வி

இறந்த யாழ் பல்கலை மாணவர்களின் பெற்றோரை போலிசார் விசாரணை செய்தது ஏன் எனஓர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என யாழ் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் தனியார் பஸ் ஊழியர்கள்

இலங்கையில் தனியார் பஸ் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அதேவேளை வழமையான போக்குவரத்து பணியில் ஈடுபட்ட அரச பஸ்கள் மீது கல் வீச்சுத் தாக்குதல்களும் இடம் பெற்றுள்ளன.

காம்பியா அதிபர் தேர்தலில் 22 ஆண்டுகளாக ஆட்சி செய்த யாக்யா ஜமே தோல்வி; மக்கள் கொண்டாட்டம்

காம்பியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், நாட்டின் தலைவராக கடந்த 22 ஆண்டுகளாக பதவி வகித்த யாக்யா ஜமே தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

கிழக்கு அலெப்போவிலிருந்து தப்பியோடும் ஆண்களை தடுப்புக்காவலில் வைக்கும் சிரியா அரசு படை

அலெப்போவின் போராளிகள் வசமுள்ள கிழக்கு பகுதியிலிருந்து தப்பியோடும் ஆண்கள் மற்றும் சிறுவர்களை சிரியா அரசு படையினர் தடுப்பு காவலில் வைத்திருப்பது பற்றி மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பாரலிம்பிக்ஸ் தங்கப்பதக்கம் வென்ற வீரரை உருவாக்கிய சாதனைத் தாய் (காணொளி)

பாரலிம்பிக்ஸ் தங்கப்பதக்கம் வென்ற வீரரை உருவாக்கிய சாதனைத் தாய் சரோஜா

குடும்பத்திற்காக ஃபார்முலா 1 பந்தயங்களிலிருந்து ஓய்வு பெறும் நிகோ ரோஸ்பெர்க்

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்திலிருந்து தான் ஓய்வு பெறப்போவதாக ஜெர்மன் கார் பந்தய வீரரான நிகோ ரோஸ்பெர்க் அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு இடம் ஒதுக்கியதால் சீனாவிலுள்ள தென் கொரியாவின் பிரபல நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை

சீனாவில் உள்ள லோட்டே என்ற தென் கொரிய நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஒரு விரிவான விசாரணையை அந்நாட்டு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் வேலையில்லா சதவிகிதம் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல்

அமெரிக்காவில் வேலையில்லா சதவிகிதம் என்பது ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் 4.6 சதவிகிதத்திற்கு குறைந்துள்ளது.

கிளிக்: பிபிசியின் வாரந்திர தொழில்நுட்பக் காணொளி

கிளிக்: பிபிசியின் வாரந்திர தொழில்நுட்பக் காணொளி

அமெரிக்கா: 6,50,000 கார்களை திரும்ப பெறும் ஃபோர்டு நிறுவனம்

விபத்து நேரிடும்போது முறையாக செயல்படுவதை தடுக்கின்ற வகையில், முன் இருக்கைகளின் பெல்ட்களில் கோளாறு இருப்பதால், அமெரிக்காவின் ஃபோர்டு கார் நிறுவனம், ஏறக்குறைய 6 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது.

அலெப்போ: ஓயாத சண்டையும் ஓடித்திரியும் மக்களும்

சிரியாவின் அலெப்போ நகரின் கிழக்கு பகுதியில் தொடர்ந்து கடும் சண்டை. சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் நெருக்கடியில்.

டமாஸ்கஸின் புறநகரில் கிளர்ச்சியாளர்களை அகற்ற அரசுடன் ஒப்பந்தம்

சிரியா அரசோடு எட்டப்பட்டுள்ள சமீபத்திய ஒப்பந்தத்தால் தலைநகரான டமாஸ்கஸின் ஒரு புறநகரிலுள்ள பல நூறு கிளர்ச்சியாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் ஏராளமானோர் பட்டினியின் பிடியில்

நைஜீரியாவில் ஏராளமானோர் பட்டினியில் பிடியில் சிக்கியுள்ளனர், உடனடி உதவிக்கு ஒரு பில்லியன் டாலர் தேவை என்கிறது ஐ நா.

லிபியாவில் ஆயுதக்குழுக்களுக்கு இடையில் 2-வது நாளாக தொடரும் சண்டை

இரண்டாவது நாளாக லிபியாவின் தலைநகரான திரிபோலியில் ஆயுதக்குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றன. தலைநகரின் தென் கிழக்கிலுள்ள பல மாவட்டங்களில் இந்த மோதல்கள் தொடர்கின்றன.

100 பெண்கள் தொடர்: ஹாங்காங் போராளி

ஹாங்காங் இயக்கத்தில் குதித்ததால் சிக்கலை எதிர்கொண்ட பெண்

வளர்ச்சியால் வாழ்விழக்கும் இலங்கை யானைகள்

இலங்கையில் வளர்ச்சிப்பணிகளால் யானைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன

இராக், சிரியாவில் ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பாவில் தாக்குதல்கள் நிகழலாம் என்று யூரோபோல் எச்சரிக்கை

சிரியா மற்றும் இராக்கில் இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் குழுவினர் தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பிய இலக்குகளை குறிவைத்து அந்த குழு தாக்குதல்களை முடுக்கிவிடும் என்று யூரோபோல் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல் முகமை எச்சரித்துள்ளது.

பாலியல் கொடுமையை பற்றி பேசாமல் இருக்க 50,000 பவுண்ட் செல்ஸீ கிளப் வழங்கியதாக குற்றச்சாட்டு

செல்ஸீ கால்பந்து கிளப்பை சேர்ந்த முன்னாள் தலைமை சாரணர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பேசாமல் இருக்க அந்த கிளப் தனக்கு 50,000 பவுண்ட் வழங்கியதாக அந்த கிளப்பின் முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சென்னை வெள்ளப்பெருக்கில் தத்தளித்தபோது உதவிய தன்னார்வலர்கள்

2015 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி, ஒரு நூற்றாண்டு காலமாக காணாத மழை பொழிவிற்கு பின்னர், இந்தியாவின் தென் பகுதியில் இருக்கும் சென்னை மாநகரம் பேரழிவை உருவாக்கிய வெள்ளப்பெருக்கால் தத்தளித்தது. 24 மணிநேரத்தில் அதிகபடியாக 272 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

டிசம்பர் மாத இறுதிக்குள் பணத் தட்டுப்பாடு நீங்கும் : நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி உறுதி

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மத்திய அரசால் திடீரென ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது ஏற்பட்டுள்ள ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்சனை இந்த மாத இறுதிக்குள் சரியாகிவிடும் என்று நாட்டின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டன்: பிரெக்ஸிட்டை எதிர்த்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி

"பிரெக்ஸிட் இடைத்தேர்தல்" என்று வர்ணிக்கப்பட்ட , லண்டன் புறநகர்ப் பகுதியான, ரிச்மண்ட் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகவேண்டும் என்ற முடிவை எதிர்த்த ஒரு வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

ஓய்வு பெற்ற தளபதியை பாதுகாப்பு செயலராக நியமித்தார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நடைபெறுகின்ற முதலாவது பேரணியில், ஓய்வு பெற்றிருக்கும் ஜேம்ஸ் மேட்டிஜை புதிய பாதுகாப்பு செயலராக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

2025-க்குள் டீசல் வாகனங்களை ஒழிக்கப் போவதாக 4 நகரங்களின் மேயர்கள் அறிவிப்பு

மாசடைந்த காற்று தரத்தை மேம்படுத்துவதற்காக, ஆண்டுக்கு 3 மில்லியன் இறப்புக்களை ஏற்படுத்தும் டீசலால் ஓடுகின்ற கார்கள் மற்றும் லாரிகளை 2025 ஆம் ஆண்டு வாக்கில் ஒழித்துவிட போவதாக உலகின் நான்கு மிக முக்கிய நகரங்களின் மேயர்கள் தெரிவித்திருக்கின்றனர்

குத்துச்சண்டையில் உலகை வியக்க வைக்கும் 9 வயது காஷ்மீர் 'அழகி'

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் வரலாறு படைத்த ஒன்பது வயது குத்துச் சண்டை வீராங்கனை குறித்த சிறப்பு பதிவு

அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை: ஃபிரான்ஸ் அதிபர் ஒல்லாந்த் திடீர் அறிவிப்பு

ஃபிரான்ஸ் அதிபர் பதவிக்கான தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிடப் போவதில்லை என அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் திடீரென அறிவித்துள்ளார்.

அலெப்போவில் குழந்தைகளை மகிழ்வித்த `கோமாளி' மனிதர் பலியான சோகம்

சிரியாவின் அலெப்போ நகரில் கடந்த தினங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலியான பலரில், கோமாளி வேடம் அணிந்து குழந்தைகளை மகிழ்விக்கும் சமூக பணியாளரும் ஒருவர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்குலாப்: பிணமாக வாழ மறுத்த மக்கள் கவிஞர்

தமிழகத்தின் முக்கிய நவீனக் கவிஞர்களில் ஒருவரான இன்குலாப் இன்று காலமானார். அவரது மறைவையொட்டி அவரது படைப்புகளையும்,வாழ்க்கையையும் அலசும் ஒரு கட்டுரை. எழுதியவர் ரவிக்குமார்

நிலவில் இறங்கிய இரண்டாவது வீரர் ஆல்ட்ரின் தென் துருவத்திலிருந்து வெளியேற்றம்

நிலவில் இரண்டாவதாக கால்பதித்த பஸ் ஆல்டிரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தென் துருவத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இன்றைய கார்ட்டூன் - பிபிசி தமிழ்

இன்றைய கார்ட்டூன் - பிபிசி தமிழ்

அழிவை நோக்கி ஆஸ்திரேலியாவின் அதிசய பவழப்பாறைகள்

ஆஸ்திரேயவைச் சுற்றியுள்ள அதிசயமான பவழப்பாறைகள் தொடர் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

எச்.ஐ.விக்கு தடுப்பு மருந்து - காணொளி

எச்.ஐ.விக்கு தடுப்பு மருந்து ஒன்று தென்னாப்பிரிக்காவில் சோதனை செய்யப்படுகின்றது

வலுவிழக்கிறது நாடா புயல்

வங்கக் கடல் பகுதியில் தோன்றியுள்ள நாடா புயல் வலுவிழந்து வருவதாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடக்குமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கணக்கில் காட்டாத வருமானத்தில் தங்கம் வாங்கினாலும் சிக்கல்: பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்பு

இந்தியாவில் தங்கம் மற்றும் தங்கநகை வாங்குவோர், கணக்கில் காட்டப்படாத வருமானத்தில் அதை வாங்கியிருந்தால் அதற்கு மிகக்கடுமையான வரி விதிக்கப்படும். அந்தத் தங்கம் பறிமுதல் செய்யவும் வாய்ப்பு உண்டு.

பார்வையற்றோரின் அழகான அணிவகுப்பு

ஆப்ரிக்க நாடான கானாவில் பார்வையற்றோரை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற சிறப்பு அழகிப் போட்டிக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

இந்தியாவில் ஒரு பெண், அரசியல்வாதியாக இருக்க சிறந்த இடம் எது?

இந்தியாவில் பெண் வேட்பாளர்களை அதிக முறை தேர்தெடுத்த ஒரு தொகுதியில் அதிகாரத்தில் உள்ள பெண்களின் நிலை என்ன என்பதை கண்டறிய சென்ற ஒரு பயணம்.

வங்கிகள், ஏடிஎம்கள் முன்னால் கூட்டம் ஏன்? - காணொளி

புதிய ரூபாய் நோட்டுக்களை வைக்கும் அளவுக்கு ஏடிஎம் எந்திரங்களில் மறுசீரமைக்கப்படாதது தான், வங்கிகள், ஏடிஎம்கள் முன்னால் அதிக கூட்டம் நீண்ட வரிசையில் நிற்க காரணமாகிறது.

தேசப்பற்று திரையரங்குகளில் தீர்மானிக்கப்படுவதில்லை என்று அரசியல் ஆய்வாளர் ஞாநி கருத்து

தேசிய கீதத்தை திரையரங்குகளில் ஒலிக்கச் செய்வதால் தேசப்பற்று முடிவு செய்யப்படுவதில்லை என அரசியல் ஆய்வாளர் ஞாநி பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மொசூல் நகரிலிருந்து வெளியேறியவர்களின் அவல நிலை

மொசூல் நகரில் ஐ எஸ் அமைப்பின் பிடியிலிருந்து வெளியேறி வந்தவர்கள் அங்குள்ள நிலை குறித்து பிபிசியிடம் தெரிவித்தனர்.

அரபு நாடுகளில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை கார்ட்டூன்களாக வெளிப்படுத்திய பெண் கார்ட்டூனிஸ்டுகள்

சில அரபு நாடுகளில் தற்போதும் கூட பெண்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும் திருமணம் செய்து கொள்வதற்கும் அல்லது நாட்டை விட்டு செல்வதற்கும், தங்களின் ஆண் உறவினர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்பதை தங்களின் கார்ட்டூன்கள் மூலம் சித்தரிக்கும் அரபுப் பெண் கார்ட்டூனிஸ்டுகள்

கால்பந்து அணி பயணித்த விமானம் வீழ்ந்தது-காணொளி

பிரேஸிலின் முக்கிய கால்பந்து அணி பயணித்த விமானம் வீழ்ந்தது

புற்றுநோயிலிருந்து மீண்டு புற்றுநோய்க்கெதிரான போர்- ராதிகா சந்தானகிருஷ்ணன்

புற்றுநோயிலிருந்து மீண்டு புற்றுநோய்க்கெதிரான போர்- ராதிகா சந்தானகிருஷ்ணன்

"சர்வதேச உணர்வை ஊட்டி வளர்த்தவர் காஸ்ட்ரோ"

உலக மக்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான ஒரு உணர்வை உருவாக்கத் துணை நின்றவர் கியூபாவின் முன்னாள் அதிபர் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோதான் என்று கூறுகிறார் மார்க்ஸிய சிந்தனையாளர் எஸ்.வி.ராஜதுரை.

பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகர வாழ்வு - புகைப்படங்களில்

கியூபா புரட்சியின் தளகர்த்தர் பிடல் காஸ்ட்ரோவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க்கையின் அரிதான புகைப்படங்கள்

ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு தமிழகத் தலைவர்கள் இரங்கல்

மறைந்த கியூப தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு தமிழக அரசியல் தலைவர்களான மு.கருணாநிதி, வைகோ உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அநாதையான 200 யானைக்குட்டிகளின் "தாயுமானவர்"

இருநூறு யானைக்குட்டிகள் உட்பட அநாதையாக விடப்பட்ட நூற்றுக்கணக்கான ஆப்ரிக்க வனவிலங்குகளின் வளர்ப்புத்தாயாகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவரின் கதை இது.

பணவீக்கத்தால் தள்ளாடும் தெற்கு சூடான்; 5 மில்லியன் மக்கள் உணவின்றி தவிப்பு

தெற்கு சூடான் நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாடற்று, சுமார் 800 சதவிகிதம் அதிகரித்திருப்பதால், பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் தேசிய புள்ளிவிவரத்துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

வறுமையில், பாரலிம்பிக்ஸ் தங்கப்பதக்கம் வென்ற வீரரை உருவாக்கிய சாதனைத் தாய்

தனித்து வாழும் பெண்ணாக நின்று, பாரலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனின் தாய் கடந்து வந்த பாதை

யாழ் பல்கலையில் இரண்டு நாள் முன்னதாகவே மாவீரர் தினம் அனுசரிப்பு

யாழ் பல்கலைக்கழக சமூகம் இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் தினத்தை அனுசரித்தது.

இந்தியாவில் ரொக்கமற்ற பொருளாதாரம் சாத்தியமா? பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் பேட்டி

இந்தியாவில் ரொக்கமற்ற பொருளாதாரம் சாத்தியமாகுமா என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் பேட்டி

இணையத்தை தெறிக்கவிடும் தலயின் வேதாளம் டீசர்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘வேதாளம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். லட்சுமி மேனன், அஸ்வின் கக்குமனு, தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.

மதுரையில் இரவு முழுவதும் விட்டு விட்டு வெளுத்து வாங்கிய கனமழை

மதுரை: மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு விட்டு விட்டு நல்ல மழை பெய்தது. மதுரையில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகல் நேரங்களில் நகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நிதானமாக பெய்த மழையை மதுரை மக்கள் ரசித்தனர்.

மதுரையில் யானை மீது அமர்ந்து சென்ற பாகன் மின்சாரம் தாக்கி பலி

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே யானை மீது அமர்ந்து சென்ற பாகன் மீது மின்சார வயர் உரசியதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (24). இவர் தல்லாகுளத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் வளர்க்கும் யானையின் பாகனாக 10 ஆண்டுகளாக இருந்தார். 10 நாட்களுக்குமுன்பு தான் இவருக்கு காதல் திருமணம் நடந்தது. {image-elephant-03-1480717209.jpg

பம்பை நதியில் பெண்கள் குளிப்பதற்கு தடை: திருவிதாங்கூர் தேவஸ்தானம்

சபரிமலை: சபரிமலை செல்லும் பக்தர்கள் நீராடும் முக்கிய நதியான பம்பையில் பெண்கள் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை ஐய்யப்பன் கோயில் தரிசனத்திற்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சில பெண்கள் ஐய்யப்ப பக்தர்களுடன் பம்பை வரை வருகிறார்கள். இவ்வாறு வரும் பெண்கள் பம்பை நதியில் குளிப்பதை

ஜெ. பூரண நலம்பெற வேண்டி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சார்பில் கூட்டு பிரார்த்தனை

சென்னை: முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சர்வ மத பிரார்த்தனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் டெல்லி ‘எய்ம்ஸ்'

ஜோக்கர் நல்ல திரைப்படம்... புகழ்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

சென்னை: அண்மையில் வெளியாகிய ஜோக்கர் நல்ல திரைப்படம் என்றும், இதுபோன்ற படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில், சவாரி திரைப்படத்துக்கு யு சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாததை எதிர்த்து அந்த படத்தின் தயாரிப்பாளர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அதில்,

விடிய விடிய பெய்த கனமழை.. சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் அடித்து ஊற்றியது

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. மதுரையில் நேற்று காலை தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்தது. மீண்டும் இரவு முழுவதும் கனமழையாக கொட்டி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நாடா புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றது. இது நேற்று அதிகாலை 4 முதல் 5 மணிக்குள்,

துபாய் வாழ் இந்திய சிறுமிக்கு சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருது

ஹேக்: துபாய் வாழ் இந்திய சிறுமி கேஹாசனுக்கு சர்வேதச குழந்தைக்களுக்கான அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் 16-வது சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கும் விழா நடந்தது. இவ்விருது வழங்கும் விழாவில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட துபாய் வாழ் சிறுமி கேஹாசன் பாசுவுக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு அமைதிக்கான

வரும் 12-ம் தேதி திருகார்த்திகை தீபம்.. அகல் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பு

சென்னை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னை, மயிலாப்பூர் பகுதிகளில் விற்பனைக்காக விளக்குகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்று வருகிறார்கள். கார்த்திகை தீபத் திருவிழா வரும் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்துக்களின் மிகமுக்கிய பண்டிகையான தீபத்திருவிழாவை ஒட்டி 3 நாட்கள் வீடுகள் தோறும் விளக்கேற்றி அலங்கரிப்பார்கள். கார்த்திகை தீபத் திருவிழாவில் திருக்கோவில்களிலும், வீடுகளிலும்

கச்சத்தீவு அந்தோணியார் கோயில் விழா.. தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை - மத்திய அரசு

டெல்லி: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய விழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி நீர்பரப்பில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இங்கு அந்தோணியர் கோயில் உள்ளது. தற்போது கச்சத் தீவில் புனரமைக்கப்பட்டுள்ள

ரயில் நிலையங்களில் ஸ்வைப் மெஷின் வசதி.. விரைவில் அறிமுகம் !

டெல்லி: ரயில்வே முன்பதிவு டிக்கெட் கவுண்டர்களில் ஸ்வைப் மெஷின் வசதியை அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 500,1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய 2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மேலும் பழைய நோட்டுகளை டிசம்பர் 30ம்

கள்ளக் காதலால் விபரீதம்.. செங்கோட்டையில் இளம் பெண் கழுத்தை நெறித்து கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இளம் பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையைச் சேர்ந்தவர் முருகன். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் செங்கோட்டை அருகிலுள்ள தென்பொத்தை கிராமத்தை சேர்ந்த வெல்லத்தாய், கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், முருகனின் சகோதரி வீட்டிற்கு கட்டட வேலைக்கு வந்துள்ளார். இவருக்கும் முருகனுக்கும்

காவிரி டெல்டாவில் திமுகவை கட்டிக் காத்த கோ.சி.மணி !

தஞ்சை: உடல்நலக்குறைவு காரணமாக கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி இன்று காலமானார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மேக்கிரி மங்கலத்தில் 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி பிறந்தார் கோ.சி. மணி. ஊராட்சிமன்ற தலைவராக பொது வாழ்க்கையை துவங்கிய கோ.சி.மணி. காவிரி டெல்டா பகுதிகளில் திமுக

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி காலமானார்

தஞ்சை: திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோ.சி.மணி உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 87. தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி, விவசாயம், மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கோ.சி. மணி (வயது 87). தி.மு.க. வில் முக்கிய பங்கு வகித்த கோ.சி.மணி, கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால்

ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம் - ஆர்.பி.ஐ. அறிவிப்பு

டெல்லி: வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்ய வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகள், இணையதள வங்கி சேவைகள், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட பணப்பரிமாற்றத்திற்கு பின் நம்பர் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி மக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சேவைகளுக்கு மாற்றாக ஆதார்

ஜியோ விளம்பரத்தில் மோடி படத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை: மத்திய அரசு மறுப்பு

டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படத்தைப் பயன்படுத்த பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார். முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஜியோ என்ற பெயரில் புதிய தொலைத்தொடர்பு சேவையை அறிமுகம் செய்தது. அதன்படி ஜியோ பயனர்கள்

பொதுத்துறை வங்கி அதிகாரிகள் 27 பேர் சஸ்பெண்ட் - நிதி அமைச்சகம் அதிரடி

டெல்லி: முறைகேடான பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பொதுத்துறை வங்கி அதிகாரிகள் 27 பேரை மத்திய நிதி அமைச்சகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தங்களிடம் உள்ள பழைய

2000 ரூபாய் நோட்டில் தேவநாகரி எண்.. ரிசர்வ் வங்கி விளக்கமளிக்க மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளில் தேவநாகரி எண் வடிவம் இடம் பெற்றிருப்பதால், அந்த நோட்டுகளை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அக்ரிகணேசன், ஹைகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அதில்

சென்னையில் மழை எவ்ளோ அழகா பெய்யுது தெரியுமா.. இந்த ட்வீட்டைப் பாருங்க! #சென்னை

சென்னை: சென்னையில் இன்று பிற்பகல் தொடங்கி தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகரமே ரம்மியமாக காணப்படுகிறது. அப்படி ஒரு குளிர், அப்படி ஒரு இதம்.. எல்லாப் பக்கமும் கலந்து கட்டி கவிதை போல பெய்து கொண்டிருக்கிறது மழை. {image-teacup-02-1480686768.jpg tamil.oneindia.com} ஒவ்வொரு துளியும் மண்ணுக்குள் போவதைப்பார்க்கும்போது அப்படி ஒரு சிலிர்ப்பு வருகிறது. கடந்த ஆண்டு போல இல்லாமல்

படையெடுத்து வரவில்லை.. பயிற்சிதான் எடுத்தோம்.. மம்தா பானர்ஜிக்கு ராணுவம் பதில்

கொல்கத்தா: கொல்கத்தா பிரதான பாலம் அருகே சுங்கச் சாவடியில் மாநில அரசின் அனுமதியின்றி ராணுவ வீரர்களை நிலைநிறுத்தியதாக அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி எழுப்பிய குற்றச்சாட்டை ராணுவம் மறுத்துள்ளது. மேற்கு வங்க மாநில போலீசாருடன் இணைந்தே பயிற்சியில் ஈடுபட்டதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு: {image-mamata455-02-1480682901.jpg tamil.oneindia.com} கொல்கத்தா- ஹவுரா இடையே உள்ள

160 கி.மீ வேகத்தில்.. பேஸ்புக்கில் லைவ் செய்தபடி காரோட்டிய வாலிபர்.. தாறுமாறாக மோதி படுகாயம்!

புராவிடன்ஸ், ரோட் ஐலன்ட், அமெரிக்கா: அமெரிக்காவில் பேஸ்புக்கில் லைவ் செய்தபடி படு வேகமாக காரோட்டி வந்த வாலிபரால் பெரும் விபத்து ஏற்பட்டது. கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில் அந்த வாலிபர் படுகாயமடைந்தார். ரோட் ஐலன்ட் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான ஒனாசி ஒலியோ ரோஜாஸ். இவர் புராவிடன்ஸ் என்ற நகரில் நெடுஞ்சாலையில் அதி வேகமாக காரை ஓட்டியபடி

தானாக முன்வந்து ரூ. 13,860 கோடியைக் கணக்கில் காட்டி சிக்கிக்கொண்ட குஜராத் "கறுப்புப் பண முதலை"!

அகமதாபாத்: கணக்கில் வராத ரூ.13000 கோடி பணத்தை தானாக முன்வந்து அரசுக்கு அறிவித்த குஜராத் ரியல் எஸ்டேட் அதிபர் வீடு மற்றும் அலுவலகங்களில் ஐடி துறை அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகிறது. தானாக முன்வந்து கருப்பு பணத்தை அறிவிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அழைப்புவிடுத்திருந்தது. இந்த திட்டத்தின்கீழ், குஜராத்தை சேர்ந்த மகேஷ் ஷா என்ற ரியல் எஸ்டேட்

பாரதியார் பல்கலை துணைவேந்தரை பதவிநீக்கம் செய்ய நெருக்கடி- வீடியோ

{video1} சேலம் : பேராசிரியர் பணிநியமனத்தில் முறைகேடு செய்ததாக பாரதியார் பல்கலைக்கழக துனைவேந்தர் கணபதி மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்ககூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பு சேலத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் பேராசிரியர் நடராஜன்,

மோடியின் செல்போன் ஆப் மூலம் ரகசியங்கள் லீக்காகும்.. குண்டு போடும் மும்பை 'ஹேக்கர்'

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ செல்போன் செயலியான 'நரேந்திர மோடி ஆப்' பயனர்களின் தகவல்களை அம்பலப்படுத்துவதாக மும்பையை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஜாவேத் காத்ரி என்பவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரேந்திர மோடி ஆப் என்ற பெயரில் வெளியாகியுள்ள ஆப்பில் அவரது உரை, பண மதிப்பிழப்பு கருத்துக் கணிப்பு போன்றவை உள்ளன. 2000 நோட்டை அந்த

அடித்து ஊற்றுகிறது கன மழை.. சென்னையில் பல இடங்களில் பலத்த மழை.. #சென்னை

சென்னை: சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை கொட்டியது. புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதால் இந்த மழை கொட்டி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புறநகர்கள் பலவற்றிலும் மாலை முதல் விடாமல் மழை பலமாக பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து

ரூ.17 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கடத்தல்.. உடுப்பி அருகே பிடிபட்டது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து உடுப்பிக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சம்பந்தப்பட்ட 3 பேரையும் கைது செய்துள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு: கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து 3 பேர் அடங்கிய கும்பல் காரில் ரூ.17 லட்சம் மதிப்பில் புதிய 2

முதலிரவில் மாப்பிள்ளைக்கு தூக்கமாத்திரை கொடுத்து பணம் நகையுடன் எஸ்கேப் ஆன புதுப்பெண்

காசியாபாத்: 'டோலி கி டால்' என்ற பாலிவுட் படத்தில் முதலிரவு நாளில் நகை பணத்தை திருடிக்கொண்டு எஸ்கேப் ஆவார் மணப்பெண். அந்த படத்தில் வருவதைப் போல காசியாபாத்தில் பங்கஜ் என்பவரின் வாழ்க்கையிலும் நடந்துவிட்டது. ஒவ்வொரு திருமண தம்பதிகளுக்கும் முதல் இரவில் மறக்க முடியாத சம்பவம் இருக்கும். உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் திருமணமாகி முதல் இரவு கனவோடு அறைக்குள்

2 நாள் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது ரூ152 கோடி ரொக்கம்!

சென்னை: சென்னை, பெங்களூரு, ஈரோட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் கணக்கில் வராத ரூ152 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 கிலோ தங்க கட்டிகள், 9 கிலோ தங்க நகைகளும் இச்சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்டன. ஈரோடு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 10 இடங்களிலும் அரசு அதிகாரிகளின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள்

மின் கம்பி அறுந்து விழுந்து 2 காளை மாடுகள் சாவு.. டிவிகள் வெடித்தன- வீடியோ

{video1} கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளி பொசப்பட்டியில் நேற்றிரவு பெய்த காற்று மற்றும் மழையால் மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் சிக்கி இரு வண்டி காளை மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. பல வீடுகளில் மிக்சி, கிரைண்டர், டிவி போன்றவை வெடித்து சிதறின.

கஞ்சா பயிரிட கனடாவில் அனுமதி: கஞ்சா தோட்டங்களாக மாறும் பூந்தோட்டங்கள்!

வின்னிபெக் : கனடாவில் அடுத்த ஆண்டு முதல் கஞ்சா பயிரிட அந்நாட்டு அரசு அனுமதிக்க உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கனடாவின் ஒரு சில மாநிலங்களில் கஞ்சா பயிரிடப்பட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டு முதல் இதனை நாடு முழுவதும் நடைமுறைபடுத்த கனடா நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. கனடாவில் கஞ்சா போதைப் பொருள் மருத்துவ தேவைக்காக அரசு அனுமதியுடன்

பொங்கலுக்கு எங்களுக்கு ஜல்லிக்கட்டு வச்சே ஆகனும்.. ஆளுநரிடம் வைகோ மனு - வீடியோ

{video1} மதிமுக தலைவர் வைகோ இன்று காலை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். சந்திப்பின் முடிவில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான, நீண்ட பாரம்பரியம் கொண்ட ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது பற்றி ஆளுநரிடம் எடுத்துக் கூறினேன் என்றார். அந்த தடையை நீக்க தமிழக அரசு

என்னது லாலு மகனுக்கும், ராம்தேவ் சொந்தக்கார பொண்ணுக்கும் கல்யாணமா?

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகனும், அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவிற்கு தனது உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதற்கான பேச்சு நடத்தவே பாட்னா சென்றதாக எழுந்துள்ள செய்தியை யோகா குரு ராம் தேவ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத்தை அவரது

உரிமைகளுக்காக ரயில் மறியல்.. திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் கைது

{video1} திருப்பூர்: மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டி, திருப்பூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தில் பிரபல ரவுடி முருகன் வெட்டிக் கொலை: வீடியோ

{video1} சேலம்: சேலத்தில் பிரபல ரவுடி முருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் பல்வேறு வழக்குளில் தொடர்புடைய பிரபல ரவுடி முருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா அல்லது பழிக்குப் பழியா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய ரூ1,000 நோட்டுகள்... ஒரிஜனல்தானா?

டெல்லி: சமூக வலைதளங்களில் புதிய ரூ1,000 நோட்டு என்ற படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் இது ஒரிஜனல் புதிய ரூபாய் நோட்டுதானா? என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு வருகிறது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அப்போதே புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும்

மழை விட்டாலும் தூவானம் விடல… நாடா புயல் கடந்தாலும் கடல் சீற்றம் குறையல

சென்னை: நாடா புயல் இன்று அதிகாலை காரைக்கால் அருகில் கரையைக் கடந்தது. என்றாலும் கடலின் சீற்றம் இன்னும் குறைந்தபாடில்லை. கடல் தற்போதும் கொந்தளிப்போடே காணப்படுகிறது. வங்கக் கடலின் தென்கிழக்கில் உருவான நாடா புயல், இன்று அதிகாலையில் காரைக்கால் அருகில் கரையைக் கடந்தது. கடலில் புயல் உருவானதால், இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

டிச. 15வரை இங்கெல்லாம் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் ஏற்கப்படும்!

சென்னை: வருகிற 15-ந்தேதி வரை ரயில், பஸ் டிக்கெட் கவுண்டர்கள், மருந்து கடைகள், மற்றும் மாநகரகாட்சி வரிகள் மின் கட்டணம் போன்றவற்றை பழைய ரூ.500 நோட்டுகளை மூலம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு நவம்பர் 8-ம் தேதி இரவு அதிரடியாக அறிவித்தது. இதனால் ஏழை-எளிய நடுத்தர

ரூபாய் நோட்டு இப்போதான் பிரிண்ட் ஆகுது.. லேட்டாகத்தான் வரும்.. அருண் ஜேட்லி ஒப்புதல்

டெல்லி: புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிட்டு முழுமையாக புழக்கத்திற்கு வருவதற்கு, தாமதம் ஆகும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். டெல்லியில் இன்று நடைபெற்ற ஆங்கில பத்திரிகையொன்றின் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அருண் ஜேட்லி இவ்வாறு கூறி கலக்கத்தை ஏற்படுத்தினார். {image-arun-jaitley45-02-1480674830.jpg tamil.oneindia.com} அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பண புழக்கத்தில் 86 சதவீதம், 500

இப்ப நாட்டுல நிறைய பேரோட நிலைமை இதுதான் பாஸ்!

சென்னை: இருக்கு ஆனா இல்லை.. இதை எந்த நேரத்தில் எஸ்.ஜே.சூர்யா வசனமா வச்சாரோ கடைசியில் அது நிஜமாவே நடந்து விட்டது மோடி புண்ணியத்தால். {tweet1} அக்கவுண்ட் நிறைய காசு இருந்தாலும் அதை எடுத்து மனசரா செலவு செய்ய முடியாது, அனுபவிக்க முடியாது. நம்மிடம் என்னதான் பணம் இருந்தாலும், அரசாங்காமாக பார்த்து எவ்வளவு செலவு செய்யச் சொல்கிறதோ அதையே

சிபிஐ இயக்குநராக குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா நியமனம்!

டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இயக்குநராக குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய இயக்குநர் அனில் சின்ஹாவின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளார். 2014-ம் ஆண்டு சிபிஐ இயக்குநராக அனில் சின்ஹா நியமிக்கப்பட்டார். அப்போது ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட வழக்குகளில் சிபிஐ கூண்டுக்

ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்காக சுப்ரீம்கோர்ட்டில் ஆஜராகிறார் சுப்பிரமணியன் சுவாமி

சென்னை: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8ம்தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், இதனை

ஐடி ரெய்டில் ரூ.5.7 கோடி புது நோட்டுகளுடன் சிக்கிய கர்நாடக ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

பெங்களூர்: பெங்களூருவில் ரூ.5.7 கோடி புதிய ரூ2,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான அதிகாரியாகும். பெங்களூரில் ஐடி அதிகாரிகள் சில ஐஏஎஸ் அதிகாரிகள் வீடுகளில் கடந்த சில நாட்களாக ரெய்டு நடத்தினர். அப்போது, காவிரி நீர்ப்பாசன வாரிய செயல் இயக்குநர் சிக்கராயப்பா மற்றும்

திருச்சி தோட்டா தொழிற்சாலை வெடிவிபத்து.. தானாக முன்வந்து விசாரிக்க ஹைகோர்ட் மறுப்பு

சென்னை: திருச்சி துறையூர் தோட்டா தொழிற் சாலையில் நடந்த விபத்து குறித்து ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரிக்க மறுத்துள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருகப்பட்டியில் தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையின் ஒரு அலகில் நேற்று திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இங்கு வெடி பொருட்கள், தோட்டா தயாரிக்கும் 15 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் ஒரு

கருணாநிதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.. 2 நாளில் வீடு திரும்புவார்.. கனிமொழி தகவல்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கருணாநிதியின் மகளும் ராஜ்ய சபா எம்பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை நோயினால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டார். அவரது உடல் சோர்வடைந்த காரணத்தால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று

திருச்சி தொழிற்சாலை விபத்தில் 19 பேர் பலி - சிதறிய பாகங்களை கண்டு கதறிய உறவினர்கள்

சென்னை: துறையூர் அருகே முருங்கப்பட்டியில் உள்ள தோட்டா தொழிற்சாலையில் மொத்தம் 7 பிரிவுகள் உள்ளன. ஷிப்ட் 6 மணிக்குத் தொடங்கிய ஒன்றேகால் மணி நேரத்துக்குப் பிறகு காலை 7 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. நிலத்தடியில் இருந்த ஆலையின் 4-வது பிரிவில் வெடிவிபத்து ஏற்பட்ட போது 22 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். இதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற

ஒரு உண்மை தெரிஞ்சாகனும்... மோடி, ஜேட்லிட உட்பட 40 மத்திய அமைச்சர்கள் ரொக்கத்தை என்ன செஞ்சாங்க?

டெல்லி: தங்களது கையில் அதிகளவு ரொக்கம் வைத்திருந்த பிரதமர் மோடி மற்றும் 40 மத்திய அமைச்சர்கள் அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்தனரா? அவர்களுக்கும் அனைவருக்கும் போல அபராதம் விதிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்து விவரம் குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு ஆண்டுதோறும் அறிக்கை அளிப்பது வழக்கம். இதன்படி கடந்த மார்ச் மாதத்தில் மத்திய

'பெருஞ்சுவர்' டிராவிட்டையே இரக்கமின்றி கொடுமைப்படுத்திய பவுலர் யார் தெரியுமா?

டெல்லி: எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்திய அணியின் பெருஞ்சுவர் என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட், தனக்கு அச்சுறுத்தலாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் யார் என்பதை தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், ராகுல் டிராவிட் களத்தில் நின்றால் அது எதிரணி பவுலர்களுக்கு மனதளவில் பலவீனத்தை கொடுத்துவிடும். இவர் எப்படியும் இன்னும் பல மணி நேரம் நிற்கத்தான் போகிறார்,

பணப்புழக்கத்தில் பாதி கருப்பு பணம்தான்.. ரொக்கமற்ற வணிகமே தீர்வு: மோடி

டெல்லி: ஊழல் மற்றும் கருப்புப் பணம் மூலமே அதிக பணப் புழக்கம் நடக்கிறது என்றும் இதனால் ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை பின்பற்றி வலுவான இந்தியாவை உருவாக்க மக்கள் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 21-வது நூற்றாண்டில் ஊழலுக்கு இடமில்லை என்ற நிலையினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். {image-modi45656111-02-1480669535.jpg tamil.oneindia.com} இதுதொடர்பாக

பணமில்லா பரிவர்த்தனை- பல்கலை. துணை வேந்தர்களுக்கு ஆளுநர் உத்தரவிடுவதா? திருமாவளவன் கண்டனம்

சென்னை: பணமில்லா பரிவர்த்தனை தொடர்பாக தமிழக பல்கலைக் கழகத் துணைவேந்தர்களுக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் திரு வித்யாசாகர் ராவ் அவர்கள் நேற்று வெளியிட்டிருக்கும் பத்திரிகை குறிப்பில் தமிழகத்திலிருக்கும்

400 பேர் வங்கி கணக்கில் ரூ.11 கோடி டெபாசிட் செய்ததா செம்மரக் கடத்தல் கும்பல்?

திருவண்ணாமலை செம்மரக்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் கணக்குகளில் 11 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்திருப்பதாக ஆந்திர மாநில டீஐஜி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் 400 பேர் கணக்கில் 11 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக் கூறியுள்ளார். செம்மரக்கடத்தல் கும்பல், ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டி அதிக விலைக்கு வெளிநாடுகளுக்கு கடத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர். இதற்காக

தோட்டா தொழிற்சாலையில் துண்டு துண்டாக சிதறி பலியான 18 பேர்- வருகைப் பதிவேடு மாயமானதாக புகார்

திருச்சி: துறையூர் அருகே முருங்கப்பட்டியில் உள்ள தோட்டா தொழிற்சாலையில் மொத்தம் 7 பிரிவுகள் உள்ளன. ஷிப்ட் 6 மணிக்குத் தொடங்கிய ஒன்றேகால் மணி நேரத்துக்குப் பிறகு காலை 7 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. நிலத்தடியில் இருந்த ஆலையின் 4-வது பிரிவில் வெடிவிபத்து ஏற்பட்ட போது 22 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். இதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற

ஷாப்பிங் மாலில் 38 சிசிடிவி கேமராக்களை உடைத்து ரூ. 4 லட்சம் திருட்டு.. சிவகங்கையில் துணிகரம்- வீடியோ

{video1} சிவகங்கை: சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் பின்புற ஜன்னலை உடைத்து மளிகைப் பிரிவில் ரூ. 4 லட்சம் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு ஷாப்பிங் மால் அடைக்கப்பட்டதும், பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 38 சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி இந்த துணிகரச் செயலில்

ரூபாய் நோட்டு தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

டெல்லி: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிரான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. {image-money4564554-02-1480666472.jpg tamil.oneindia.com} இந்த வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க

ரூபாய் நோட்டு செல்லாது… மேற்கு வங்கத்தில் ராணுவம்.. எதிர்க்கட்சியினர் அமளி… முடங்கியது நாடாளுமன்றம்

டெல்லி: இதுவரை ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சியினர், இன்று மேற்கு வங்கத்தில் ராணுவம் நிறுத்தப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 13வது நாளாக முடக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் குளிர் காலக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து ரூபாய் நோட்டு

நாட்ல மக்கள் தொகை அதிகம்.. கியூவூம் பெருசாதான் இருக்கும்.. அருண் ஜேட்லி அசால்ட் பதில்

டெல்லி: அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் இந்த மாதிரி கியூவெல்லாம் எதிர்பார்த்ததுதான் என்று, அசால்ட்டாக கூறியுள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பிறகு மக்கள் தங்கள் அன்றாட அலுவல்களை தியாகம் செய்துவிட்டு ஏடிஎம்களில் தவம் கிடக்கிறார்கள். மழை, வெயில் என பாராமல் அவர்கள் கஷ்டம் தொடர்ந்தபோதும், இன்னும் உரிய பணம்

கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் குஷ்பு- வீடியோ

{video1} சென்னை: நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். அந்தவகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்றார். பின்னர் செய்தியாளர்கள்

திமுகவினருக்கு உற்சாக செய்தி... விரைவில் வீடு திரும்புகிறார் கருணாநிதி: ஸ்டாலின்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை நோயினால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டார். அவரது உடல் சோர்வடைந்த காரணத்தால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு கண்டு பிடிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மருத்துவக் குழுவினர் அளித்து வரும் சிகிச்சையில்

புது 500 ரூபாய் நோட்டுக்களைப் பொருத்தி, ஏடிஎம் ரெடியாக இன்னும் ஒரு வாரம் ஆகுமாம்!

சென்னை: 100 ரூபாய் நோட்டைவிட புதிய 500 ரூபாய் நோட்டு சிறியது என்பதால், அவற்றை ஏடிஎம் இயந்திரங்களில் வைக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனை சரி செய்யும் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் என்றும் அதன் பிறகு பணத்தட்டுப்பாடு நீங்கும் என்றும் வங்கித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது

அப்பா எப்படி இருக்காரு இப்போ?... கனிமொழியிடம் விசாரித்த வைகோ

சென்னை: உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலைக் குறித்து அவரது மகள் கனிமொழியிடம் விசாரித்ததாக வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருச்சியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்தார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தி.மு.க. தலைவர் கலைஞர் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம்

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் சீன வீராங்கனையிடம் வீழ்ந்தார் சாய்னா!

மக்காவ் : ஓபன் பேட்மிண்டன் காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியடைந்தார். சீன வீராங்கனையிடம் தோற்ற அவர் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மக்காவ் நகரில் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆடவர், மகளிர் என இருபிரிவினருக்கும் நடைபெறும் இப்போட்டியில் உலகின் முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். {image-saina434-600-02-1480662599.jpg tamil.oneindia.com} இதில்

நூதன மோசடி.. கருப்பு பணத்தை வெள்ளையாக்க கூலித் தொழிலாளர்கள் வங்கி கணக்கை பயன்படுத்திய கயவர்கள்!

ராமநாதபுரம்: கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக அப்பாவிகள் வங்கி கணக்குகள் அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தப்படும் அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில்தான் இந்த அக்கிரமம் நிகழ்ந்துள்ளது. அருகேயுள்ள பண்ணைவயல் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் அந்த வங்கியில்தான் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர் {image-money345-02-1480662450.jpg tamil.oneindia.com} அந்த தொழிலாளர்களின் வங்கி கணக்கில் அவர்களுக்கே

அடடா... அவசரப்பட்டுட்டீங்களே! (+18 மட்டும்)

ஒரு ஊர்ல ஆம்பளைங்க மட்டுமே இருந்தாங்க. அந்த ஊருக்கு வந்த பாலியல் பிரச்சினைகள் தொடர்பான ஆலோசகருக்கு (நம்ம மாத்ரு பூதம் மாதிரி) ஆச்சரியம். எப்படி யார் கூட இவங்க செக்ஸ் வச்சுக்குவாங்க என்று யோசித்தார். ஒருநாள் அந்த ஊர்க்காரர் ஒருவரை கூப்பிட்டு. ஏன் தம்பி "அப்படியாப்பட்ட" விசயத்துக்கு நீங்க என்ன செய்வீங்க, எங்க போவீங்க என்று கேட்டார்.

எப்படி சிக்கியிருக்காங்க பாருங்க.. பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வந்தபோது 3 நக்சலைட்டுகள் கைது

ஹைதராபாத்: சுமார் 12 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற மாவோயிஸ்டுகளை தெலங்கானா மாநில மெகபூபா மாவட்ட போலீசார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக மெகபூபா மாவட்ட மக்தல் காவல் நிலைய போலீஸ் அதிகாரி கூறியிருப்பதாவது: சமூக விரோத கும்பலுடன் தொடர்புடையதாக கருதப்படும் சிலர் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயல்வதாக தகவல் கிடைத்தது.

நீதிமன்றங்களில் தேசிய கீதத்தை கட்டாயமாக்க மனு- சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

டெல்லி: நாடு முழுவதும் திரையரங்குகளில் படக் காட்சிக்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும். அவ்வாறாக திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைக்கும்போது பொதுமக்கள் அரங்கில் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று பொதுநல மனு ஒன்று

சேலம் உருக்காலை பங்குகளை தனியாருக்கு விற்க திருச்சி சிவா, ரங்கராஜன் எதிர்ப்பு-அதிமுக எம்பிக்கள் அமளி

சென்னை: சேலம் உருக்காலை பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது என ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கட்சியின் எம்பி டிகே ரங்கராஜன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து

விஜயகாந்த்துக்கு அப்புறம் இந்த விருச்சிககாந்த்தான்.. கோஹ்லி பற்றி பாகிஸ்தான் கோச் சொல்றத பாருங்க!

பிரிஸ்பேன்: பாகிஸ்தானின் 22 வயது இளம் வீரர் பாபர் அசாம், இந்தியாவின் விராட் கோஹ்லி போல, பெரிய வீரராக வருவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்

அந்தம்மாவுக்கு நீளமா கூந்தல் இருக்கே.. குறி வைத்து "கட்" செய்த "திருப்பாச்சி திருடன்" கைது!

சென்னை: சென்னையில் அண்மைக்காலமாக நீளமான கூந்தலை உடைய பெண்களின் முடி பஸ் மற்றும் ரயில்வே நிலையங்களில் வெட்டப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து முடியை வெட்டி விற்பனை செய்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். நகை, பணம், விலையுயர்ந்த பொருட்கள் போன்றவற்றை மட்டுமே இதுவரை கொள்ளையர்கள் கொள்ளையடித்து வந்தனர். இந்நிலையில் தற்போது பெண்களின் நீளமான கூந்தலையும் அவர்கள் குறிவைத்து

மேற்குவங்கத்தில் திடீரென ராணுவம் ஏன்... திரிணாமுல் எம்பிக்கள் லோக் சபாவில் அமளி

டெல்லி: மேற்கு வங்கத்தில் திடீரென ராணுவத்தை மத்திய அரசு இரண்டு இடங்களில் நிறுத்தியுள்ளது. இதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், லோக் சபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள், மேற்குவங்கத்தில் ராணுவத்தை நிறுத்த காரணம் என்ன என்று கேள்வி கேட்டு அமளியில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தில் உள்ள தேசிய

'டி.ஆர்.பி' பிரதமர்.. சுய நலத்துக்காக ராணுவ வீரர்களை பலி கொடுக்கிறார்.. ராகுல் காந்தி ஆவேச பேச்சு

டெல்லி: நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து வியூகம் வகுப்பதற்காக டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி ஆக்ரோஷமாக பேசினார். அவர் கூறிதாவது: பிரதமர் மோடி டிவி டி.ஆர்.பி ரேட்டிங் அரசியலை நடத்துகிறார். பரபரப்பு விளம்பரமே அவருக்கு தேவை. அரசியல் கட்டமைப்பில் அனுபம்மிக்கவர்களை தாண்டி

தூத்துக்குடி அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து- 4 பேர் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி: பேருந்து ஒன்றில் பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கு கத்திக் குத்து விழுந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் பேருந்து ஒன்றில் பயணம் செய்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, சிலர் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. {image-murder135-02-1480658051.jpg tamil.oneindia.com} இதில், பதுகாயமடைந்த மாணவர்கள் இரண்டு பேர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏடிஎம் ஏடிஎம்மாக ஏறி இறங்கும் அரசு, தனியார் ஊழியர்கள்.. சம்பளத்தை எடுக்க முடியாமல் பரிதவிப்பு

சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் கடந்த 24 நாட்களாக வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மக்களின் அன்றாட செலவுக்கு கூட போதிய அளவு பணம் இல்லாமலும், மருத்துவம் மற்றும் அத்யாவசிய தேவைகளுக்கு பணம் இல்லாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை முதல் குமரி

திருப்பதி: செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 3 தமிழக தொழிலாளர்கள் கைது- வீடியோ

{video1} திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு கும்பல் ஒன்று செம்மரக்கட்டைகளைக் கடத்துவது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கடத்தல் கும்பலைச் சரணடையும்படி எச்சரித்த போலீசார், வானத்தை நோக்கிச் சுட்டனர். ஆனால், போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய அக்கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து

நாடா புயல்.. பரவலாக மழை... விவசாயிகள் மகிழ்ச்சி… வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள்

சென்னை: தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் இல்லாமல் பயிர்கள் வாடி கருகி இருந்த நிலையில் இந்த மழை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை நாடா புயல்

அடப்பாவமே.. இதுக்குத்தான் புயலுக்கு நாடான்னு பெயர் வச்சாங்களா!

சென்னை: நமது மீம் உற்பத்தியாளர்கள், சுனாமியிலேயே ஸ்விம்மிங்கை போடுபவர்கள். நாடா புயலை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? இப்படி வாட்ஸ்அப்பில் வைரலாக வலம் வரும் ஒரு ஜோக்தான் இது. "நம்ம பணத்தைக்கூட நம்மளால எடுக்க முடியல,இதெல்லாம் ஒரு நாடா?ன்னு யோசிச்சுக்கிட்டிருந்த எவனோ தான் இந்த புயலுக்கு "நாடா"ன்னு வச்சிருக்கணும்! நாடா புயல் வலுவிழந்து கரையை கடந்தததற்கு பிறகு பரவிவரும்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை தேவை- ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வைகோ கோரிக்கை

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவர பிரதமர் மோடியிடம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக வைகோ தெரிவித்துள்ளார். ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக வைகோ அறிவித்திருந்தார். இதற்கு மக்கள்

நல்ல செய்தி... வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு!

டெல்லி :தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மறுநாள் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியிருந்த நாடா புயல் இன்று அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்தது. பெரும் சேதம் எதும் ஏற்படுத்தாமல் இந்த புயல்

வெறும் காத்து தான் வருது... ஓ நாடா..!

சென்னை: மழை வரும், கனமழை வரும் என ஆளாளுக்கு மிரட்டிக் கொண்டிருக்க, பேருக்கேற்ப பெருந்தன்மையோடு கடந்து சென்றது நாடா புயல். இதற்கிடையே நாடா புயல் குறித்து பல்வேறு பீதிகளுக்கு இடையே நெட்டிசன்கள் வழக்கம் போல் மீம்ஸ் போட்டு அதனை கலாய்த்துக் கொண்டு தான் இருந்தனர். அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக... {photo-feature}

தங்க நகை வைத்திருக்க கட்டுப்பாடு இல்லைங்க.. குமாரசாமி தீர்ப்பை நினைத்து பாருங்க, குழப்பம் வராது!

டெல்லி: ஒவ்வொரு தனி மனிதனும் இவ்வளவுதான் தங்கம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு வரையறுத்துள்ளதாக நேற்று பெரும் வதந்தி பரவியிருந்தது. ஆனால் அப்படி எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. உண்மையை சொல்லப்போனால், நகைகள் தொடர்பான பழைய சட்டத்தில் உள்ள ஷரத்துக்களில் ஒரு சிறு திருத்தத்தை கூட மத்திய அரசு செய்யவில்லை. அப்படியிருந்தும், இந்த வதந்தி ஏன்

நடுக்கடலில் தத்தளித்த 73 மீனவர்கள் மீட்பு… இன்னும் 20 பேரை தேடும் பணி தீவிரம்

நாகை: கடந்த 25ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 93 பேர் கரை திரும்பவில்லை. நடுக்கடலில் தத்தளிப்பதாக தகவல் வந்ததை அடுத்து உள்ளூர் மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் 73 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் கிச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கோடியக்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 93 பேர்

பா.ம.க.வின் மிரட்டலால் சென்னையில் உடனடியாக திறக்கப்பட்ட மேம்பாலங்கள்!

சென்னை: வடபழனி உள்ளிட்ட 3 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டிருந்தன. பணிகள் முடிந்தும் இவை திறப்படாமல் இருந்த இந்தப் பாலங்கள் நேற்று அதிகாலை முதல் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. வடபழனி, அண்ணா ஆர்ச், ரெட்டேரி சிக்னல் ஆகிய 3 இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இந்நிலையில் பணிகள் முடிந்தும் இவை திறக்கப்படாமல் இருந்தன. இதில் ரெட்டேரி

சட்டசபை குழுக்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: சட்டசபை குழுக்களை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான முக ஸ்டாலின் இன்று நேரில் வலியுறுத்தினார். எதிர்க்கட்சிகளைக் கொண்ட சட்டசபை குழுக்களை தமிழக அரசு இதுவரை அமைக்கவில்லை. இந்த குழுக்களை உடனே அமைக்க வேண்டும் என ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

பதவி ஏற்கும் முன்னரே, ஆயிரம் பேர் வேலையைக் காப்பாற்றிய ட்ரம்ப்!

இண்டியானாபோலிஸ்(யு.எஸ்): அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவுக்கு செல்ல இருந்த 1000 வேலைகளை, தடுத்து நிறுத்தி அமெரிக்கர்களுக்கு கிடைக்கச் செய்துள்ளார் ட்ரம்ப். இண்டியானா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையை மெக்சிகோவுக்கு மாற்றப்போவதாக கேரியர் ஏர்கண்டிஷனிங் நிறுவனம் அறிவித்தது. அதனால் அங்கு வேலைப் பார்க்கும் 1400 பேர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டது. {image-trump9643-02-1480652938.jpg tamil.oneindia.com} "அமெரிக்கர்களின் வேலைகள் மெக்சிகோவுக்கோ, சீனாவுக்கோ செல்ல அனுமதிக்க

நாடா புயல் கரையை கடந்தாலும் மழை பெய்யும்- ஆறுதல் செய்தி சொன்ன வானிலை மையம்

சென்னை: வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாமல் ஏமாற்றிய நிலையில் நாடா புயலால் பெரும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயலோ வலுவிழந்து பெருந்தன்மையுடன் கடந்து போய்விட்டது. சென்னையில் மழையைக் காணோமே என்று மக்கள் ஏக்கத்தில் இருக்க, அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் ஆறுதல் செய்தி

எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களை அரவணையுங்கள், ஒதுக்காதீர்கள்.. பள்ளி நிகழ்ச்சியில் அறிவுரை

தேவகோட்டை: அறிகுறியே இல்லாத நோய் எய்ட்ஸ். எய்ட்ஸ் பாதிப்பு அதிக அளவில் மனிதர்கள் இடம்பெயரும் இடங்களில் காணப்படுகிறது. எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கக் கூடாது, அவர்களை அரவணைக்க வேண்டும் என்று தேவகோட்டையில் நடந்த உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சியின்போது தெரிவிக்கப்பட்டது. தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு

அறைக்குள் அமர்ந்து நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு என்ன தெரியும்? கேட்கிறார் ராமகிருஷ்ணன்

சென்னை: சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை ஜீ தமிழ் டிவியில் நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், அதிக அளவில் விமர்சனங்கள் எதிர்கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவரது நிகழ்ச்சிக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவிட்டாலும் எதிர்ப்பு குரல்களும் எழாமல் இல்லை. லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை வைத்து பாடல்களும், டிவி நிகழ்ச்சிகளில் காமெடி நிகழ்ச்சிகளும் எடுக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டது.

பெங்களூரை நோக்கி நகர்ந்து வரும் நாடா.. குளிரோடு மழையும் சேர்ந்ததால் மக்கள் 'நடுக்கம்'

பெங்களூர்: நாடா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்தநிலையில் அதன் தாக்கத்தால் பெங்களூரிலும் விடிய விடிய மழை பெய்தது. வங்கக்கடலில் உருவான நாடா புயல், காரைக்கால் அருகே இன்று காலை கரையை கடந்தது. இந்த காற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தபடி உள்ளது. அதாவது, தருமபுரி, கிருஷ்ணகிரி, தென் கர்நாடக மாவட்டங்களை இந்த காற்று

இது புயலா?... இல்ல இதுதான் உங்க புயலா?

சென்னை: நாடா புயலின் புண்ணியத்தில் சென்னையில் நேற்று ஒரு நாள் மழை பெய்தது. நீண்ட நாட்கள் பெய்த மழையை ஆசையுடன் அனுபவித்த மக்கள், சமூக வலைத்தளங்களில் தங்களின் உணர்வுகளை பதிவிட்டனர். மழைக்கால காளான்கள்தான் பார்த்திருப்போம். மழைக்கால கவிஞர்கள் பலரும் தங்களின் உற்சாகத்தை பதிவிட்டனர். மழை நீடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒருநாள் மழையோடு நின்று போனது பலருக்கும் ஏமாற்றம்தான். {photo-feature}

மழை: இன்றும் 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை- மாணவர்கள் ஹேப்பி அண்ணாச்சி

சென்னை: நாடா புயல் கரையை கடந்தாலும் இன்றும் மழை பெய்யும் என்பதால் தமிழகத்தில் 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. சென்னையை நோக்கி நகர்ந்து வந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை புயலாக மாறியது. {image-school4356-02-1480650036.jpg tamil.oneindia.com} நாடா

திடீர் என குவிந்த ராணுவம்: தலைமைச் செயலகத்தில் மமதா விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சுங்கச்சாவடிகளில் ராணுவத்தார் குவிக்கப்பட்டதை கண்டித்து அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி விடிய விடிய தலைமைச் செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகமான நபானா அருகே உள்ள சுங்கச்சாவடி உள்பட மாநிலத்தின் பல்வேறு சுங்கச்சாவடிகளில் நேற்று ராணுவத்தார் குவிக்கப்பட்டனர். {image-mamata-banerjee-02-1480649348.jpg tamil.oneindia.com} இதை கண்டித்து அம்மாநில முதல்வர்

பணம் இல்லை என்றதால் ஆத்திரம்: தூத்துக்குடியில் வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வங்கி திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் பணம் இல்லை என்றதால் பொதுமக்கள் ஆத்திரத்தில் வங்கியை முற்றுகையிட்டனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துவிட்டதால் பொதுமக்கள் அவற்றை வங்கியில் மாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 1ம் தேதி என்பதால் பலர் பென்ஷன் வாங்கவும், அரசு

கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் அத்துமீறி நுழைந்த ஜார்கண்ட் வாலிபர்

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலைய பகுதியில் அத்துமீறி நுழைந்த ஜார்கண்ட் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் மற்றும் பணகுடி அருகே மகேந்திரகிரி இஸ்ரோ மையம் ஆகியவை அமைந்துள்ளன. இவற்றில் 24 மணி நேரமும் மத்திய தொழில் பாதுகாப்பு

பெயருக்கு ஏற்றது போல் பெருந்தன்மையுடன் கரையை கடந்த 'நாடா': சென்னைவாசிகள் நிம்மதி பெருமூச்சு

சென்னை: நாடா புயல் கரையை கடந்துள்ளதால் சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி சென்னை வெள்ளத்தில் மிதந்தது. மக்கள் படகுகளில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த நாட்களை சென்னைவாசிகளால் இன்றும் மறக்க முடியவில்லை. {image-nada--cyclone-sat-images-02-1480647151.jpg tamil.oneindia.com} இந்நிலையில் சென்னை நோக்கி வந்த நாடா புயலால் மிக கனமழை பெய்யும்

மேட்டூர் அருகே ரசாயணம் ஊற்றி மூட்டை கட்டி வீசப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள்

மேட்டூர்: மேட்டூர் அருகே மூட்டை கட்டி ரசாயணம் ஊற்றி அழிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அருகே காவிரி கரையோரத்தில் மூட்டையுடன் 500 ரூபாய் நோட்டுகள் கறுப்பு நிறத்தில் கிடந்தன. அந்த நோட்டுகளை யாரும் பயன்படுத்தாமல் இருக்க ரசாயணம் ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது. {image-money65423-02-1480645986.jpg tamil.oneindia.com} ரசாயணம் பட்டு கருகிய நோட்டுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த

மோடியால் மனைவியின் சடலத்துடன் தெருவோரம் 2 நாட்களாக இருந்த கூலித் தொழிலாளி

நொய்டா: நொய்டாவில் தினக்கூலி ஒருவர் தனது மனைவியின் சடலத்தை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் இரண்டு நாட்களாக காத்திரு்த கொடூரம் நடந்துள்ளது. கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8ம் தேதி தடை விதித்தார். அதில் இருந்து நாட்டில் பணத் தட்டுப்பாடாக உள்ளது. {image-dead-body-02-1480645231.jpg

காரைக்கால் அருகே கரையை கடந்தது 'நாடா': மழையுடன் சுழற்றி அடித்த காற்று

சென்னை: நாடா புயல் கடலூர் மற்றும் காரைக்கால் இடையே இன்று கரையை கடந்தது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைய நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரத் துவங்கியது. இந்த புயலுக்கு நாடா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. {image-rain-111-60-02-1480644679.jpg tamil.oneindia.com} இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதன்கிழமை

தனியார் பள்ளிகள் இல்லை.. சொந்த வீடு இல்லாதவர்கள் இல்லை.. ஹேட்ஸ் ஆப் பிடல் காஸ்ட்ரோ!

சென்னை: தனியார் பள்ளிகளே இல்லாமல் முழுவதும் அரசே பள்ளிகளை நடத்தி அதில் இலவசமாக கல்வி கொடுத்து 99.8 சதவீதம் கல்வி அறிவு பெற்ற நாடாக கியூபா விளங்குகிறது. இதற்கு அந்நாட்டின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் தலைமைதான் காரணம் என்றால் அது மிகையாகாது. 1926ம் ஆண்டு பிறந்து பொதுவுடமைச் சித்தாந்தத்தின் மேல் ஈர்ப்பு கொண்டு அதன் வழி சென்றவர்

ஓமலூர்- ஓசூர் பாதையை சேலம் கோட்டத்தில் சேர்க்க ரயில்வே அமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: ஓமலூர் - ஓசூர் பாதையை சேலம் கோட்டத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு அளித்துள்ளார். மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ்

சில்லரை தட்டுப்பாடு.. டிச.30 வரை சுங்கவரி ரத்து நீட்டிக்க வேண்டும்: விக்கிரமராஜா கோரிக்கை

சென்னை: சில்லரை தட்டுப்பாடு முறையாக தீர்க்கபடாததால் டிசம்பர் 30 வரை சுங்கவரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கத்தில் 150வது வட்ட வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் தேர்வு மற்றும் அறிமுக விழா நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்க

தமிழகம், புதுவை கடற்கரையில் பலத்த காற்று வீசுகிறது..காரைக்கால் அருகே கரையை கடக்கிறது "நாடா புயல்"

புதுச்சேரி: காரைக்கால் அருகே வலுவிழந்த நிலையில் கரையைக் கடக்க துவங்கியது நாடா புயல். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நாடா புயல் காரைக்கால் அருகே வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க உள்ளது. காரைக்காலுக்கு கிழக்கு - தென்

ஜெ.சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு பூஜைகள் நடத்த திடீர் தடை !

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு பூஜைகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று மருத்துவமனையில் அட்மிட் ஆன ஜெயலலிதாவிற்கு நோய் தொற்று ஏற்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே,

நாடு முழுவதும் சுங்க கட்டணம் ரத்தால் ரூ.1,238 கோடி இழப்பு - பொன்.ராதாகிருஷ்ணன்

டெல்லி: நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 1,238 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 8ம் தேதி இரவு ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் மோடி. இதையடுத்து நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சில்லரை தட்டுப்பாடு

கருணா கைது! அடுத்தது 2.0. லைக்கா! பொறி வைக்கும் இலங்கை!

இலங்கை ஆட்சியாளர் களோட கவனம், முன்னாள் அதிபரான கொலைவெறியன் ராஜபக்சவோட ஆட்கள் மேலே திரும்பியிருக்குதே?ஆமாங்க தலைவரே… இலங்கையை ஆளும் சிறீசேன அரசு, முந்தைய ராஜபக்ச அரசின் ஊழல் விவகாரங்களைத் தோண்டித் துருவி கடுமையான.

கடல் மட்ட அதிகரிப்பு மனித இனத்தின் இருப்புக்கு ஆபத்து

2016ம் ஆண்டு நிறைவடைவதற்கு சில வாரங்களே உள்ளன. அதனால் கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்க இது சரியான தருணமே. கடந்த வருடத்தைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக காலநிலை ஏஜன்சி மிகவும் பாரதூரமான.

தோழர் பிடல் கஸ்ட்ரோவுக்கு இறுதி மரியாதை

மேற்குலகம் ஆட்டிப் படைத்த கியூபாவை மீட்டெடுத்து தலை நிமிர வைத்த புரட்சிக்காரர் பிடல் கஸ்ட்ரோ தனது 90 வது வயதில் உலகத்துக்கு விடைகொடுத்து கண்களை மூடிக்கொண்டார். அமெரிக்க சி. ஐ. ஏ. உளவுப் பிரிவு அவரைக் கொல்வதற்காக 600.

இலங்கை தூதரகத்தின் எச்சரிக்கை கடிதம் வரலாம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமர்வின் எதிரொலி

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வினை நடாத்த Le Blanc Menil (93) நகரசபை அனுமதித்ததற்கு சிறிலங்கா தூரதரகத்தின் எச்சரிக்கை கடிதம் வரலாம் என நகரபிதா அவர்கள் தெரிவித்துள்ளார்.பாரிசின் புறநகர் பகுதியான நகரசபையின் முறையான.

புலமைபரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

வவுனியா சேனைபுலவு வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்று 2016 புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (2) பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.இந்நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச.

மலையகத்தின் எதிர்காலத்தை எங்களால் தீர்மானிக்க முடியும் - அரவிந்த குமார்

மலையகத்தின் மாற்றத்திற்கும் எழுச்சிக்கும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சினால் மிகச்சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி தர முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.வரவு செலவு திட்டம் தொடர்பாக.

விபத்துக்கு முன்னர் பெண் விமானி கூறியது என்ன..? வைரலாகும் காணொளி

அண்மையில் கொலம்பியாவில் 75 பேரின் உயிரை காவு கொண்ட விமான விபத்து தொடர்பில் பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.இந்நிலையில், குறித்த விமானத்தில் விமானியாக தனது முதல் பயணத்தை ஆரம்பித்த 29 வயதான Sisy Arias என்ற பெண்.

மன்னார் கடலோரத்தில் கரையொதுங்கிய அபூர்வ உயிரினம்...!

மன்னார் கடலோரத்தில் இன்று (02) இறந்த நிலையில் கடற்பன்றி ஒன்று கரை ஒதுங்கியுள்ளதுமிகப் பெரியகடல் மலைப் போல கரை ஒதுங்கிய கடற் பன்றியை கடற்படையினர் அப்புரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இலங்கைக்கே உரித்தான 08.

கோரிக்கைக்கு பதில் வழங்கிய அமைச்சர் ரிஷாட் - நன்றி தெரிவித்த கூட்டமைப்பு

1956ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை தேசிய கடதாசி தொழிற்சாலை 1996ஆம் ஆண்டு பின்னடைவை சந்தித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வரவு செலவு திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்.

காலக்கவிஞனுக்கு அனைத்துலகத் தொடர்பகத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களால் கண்ணீர் வணக்கம்

தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உறுதுணையாளருமான முற்போக்குக் கவிஞர் இன்குலாப் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று( 01) சென்னையில் காலமானார்.கவிஞருக்கு அனைத்துலகத்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி காலமானார்

தஞ்சை : தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி வயது (87) உடல்நலக் குறைவால் காலமானார். தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் தமது வீட்டில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உயிர் பிரிந்தது. தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் அமைச்சராக பல துறைகளை கவனித்து வந்தவர்.

நாட்டின் பலவேறு விமான நிலையங்களில் 39.11 கோடி பறிமுதல்

சென்னை : நாட்டின் பலவேறு விமான நிலையங்களில் ரூ.39.11 கோடி ரொக்கம்; 163 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.7.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் சுங்க துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை அந்தேரி பகுதியில் 9கிலோ தங்கம் பறிமுதல்

மும்பை : மும்பை அந்தேரி பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ 2.5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்த 7 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரியில் மிதமான மழை

சென்னை: பொன்னேரி மற்றும் சுற்றுவட்டாரங்களில் அரை மணி நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம்

டெல்லி : ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது.  2017 ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் வழி பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்ய கால அவகாசம் தரப்பட்டுள்ளதாக  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் வழி பண பரிவர்த்தனையை அமல்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி  இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெபிட்,கிரெடிட் கார்ட்களில் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் வழி மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும்  பரிவர்த்தனைக்கு எலக்ட்ரானிக் சிப் அட்டை, ரகசிய எண், பயோ மெட்ரிக் அடையாளம் ஆகியவை கட்டாயமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வைத்து  இருக்கவும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆதார் வழி பணப் பரிவர்த்தனையை எப்பொழுது அமல்படுத்துவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையில் கரை ஒதுங்கிய நாகை மீனவர்கள் 10 பேர் இந்திய கடலோர காவற்படையிடம் ஒப்படைப்பு

நாகை: இலங்கையில் கரை ஒதுங்கிய நாகை மீனவர்கள் 10 பேர் மற்றும் 2 படகுகளை இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். மீன்பிடிக்க சென்ற போது படகு பழுதானதால் 10 மீனவர்கள் இலங்கையில் கரை ஒதுங்கினர். இந்திய கடலோர காவற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று இரவு தாயகம் திரும்ப வாய்ப்புள்ளது.

மெமோ கொடுத்ததால் பேருந்து ஓட்டுநர் மயக்கம்

சென்னை : பொன்னேரியில் 5 நிமிடம் சீக்கரம் வந்ததற்காக மெமோ தரப்பட்டதால் பேருந்து ஓட்டுநர் மயக்கமடைந்தார். செங்குன்றத்தில் இருந்து பழவேற்காடு சென்ற அரசு பேருந்து பொன்னேரிக்கு 5நிமிடம் முன்னரே வந்தது. இதற்காக பேருந்தை ஒட்டி  வந்த வெங்கடேஸ்வரனுக்கு டிக்கெட் பரிசோதகர் மெமோ கொடுத்துள்ளார். பேருந்து செல்லாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 27 வங்கி அதிகாரிகள் பணியிடை நீக்கம்

டெல்லி : பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 27 வங்கி அதிகாரிகள் பணியிடை நீக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அவர்கள் முறைகேடான பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதால் நிதியமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் குண்டர் சட்டத்தில் 13 பேர் கைது

சென்னை : சென்னையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கச்சத்தீவு கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழர்களுக்கு அனுமதியில்லை: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழர்களுக்கு அனுமதியில்லை என மத்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. தற்போது நடைபெறுவது சிறிய விழா மட்டுமே. எனவே தமிழக மீனவர்களை கலந்து கொள்ள அனுமதி கிடையாது என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இதேபோல் இலங்கையை சேர்ந்த பக்தர்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தூய்மை இந்திய திட்டத்திற்கு ரூ.224 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தூய்மை இந்திய திட்டத்தை செயல்படுத்த ரூ.224 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2வது தவணையாக மத்திய அரசு பங்களிப்புடன் தமிழக அரசு நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. தூய்மை இந்திய திட்டத்தை தமிழக கிராமங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார்குடி அருகே பணம் எடுக்க வங்கிக்கு சென்ற விவசாயி மயங்கி விழுந்து பலி

திருவாரூர்: மன்னார்குடி அருகே புதுக்குடியில் அசோகன் என்ற விவசாயி உயிரிழந்துள்ளார். பணம் எடுக்க வங்கிக்கு சென்ற போது மயங்கி விழுந்து உயிரழந்துள்ளார்.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன்- பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லி: டெல்லி வந்துள்ள  இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.   இருநாட்டு உறவுகள் குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.                 

அகமதாபாத்தில் ரூ.13,860 கோடி சொத்து சிக்கியது

அகமதாபாத் : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் ஷா எனபவர் வீட்டில் ரூ.13,860 கோடி சொத்து ஆவணம் சிக்கியது. அகமதாபாத் நகரில் மகேஷ் ஷா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதியதில் தெரியவந்தது. ரூ.13,860 கோடி சொத்துகளும் கணக்கில் காட்டப்படாத வருமானம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு

ஆர்.எஸ்.புரா: சுக்குனாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மேஜர் அரவிந்த் பசலா உடலுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புராவில் இறுதி சடங்கு நடைபெற்றது. இந்த சடங்கில் ஏராளமான ராணுவ அதிகாரிங்கள் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற குழுக்கள் அமைக்காதது தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: சட்டமன்ற குழுக்கள் அமைக்கப்படாதது தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். சந்திப்பின் போது சட்டமன்ற குழுக்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கோவையில் 70 சதவீதம் உற்பத்தி இழப்பு

கோவை : 500,1000 ருபாய் செல்லாது என்ற நடவடிக்கையால் கோவை மாவட்டத்தில் 70 சதவீதம் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் கோவை மாவட்டத்தில் அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டது.

உத்திர பிரதேசத்தில் 30 பாட்டில்களில் வைக்கப்பட்ட கள்ளச்சாராயம் பறிமுதல்

சாண்டுளி: உத்திர பிரதேச மாநிலம் சாண்டுளி என்ற இடத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 30 பாட்டில்களில் வைக்கப்பட்ட கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை தொடரும்

சென்னை:  புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை  பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது . சென்னை மற்றும் புறநகரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை : ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். மேலும் சட்டமன்ற நிலைக் குழுக்கள் அமைக்க வலியுறுத்தி ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.

Discussions & Comments

comments powered by Disqus